ஜெயாவுக்காக சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்ட தருண் விஜய்

ஜெயாவுக்காக சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்ட தருண் விஜய்

1 mins read
Google News Preferred Icon

டில்லி: தமிழக முதல்வருக்காக பாரதிய ஜனதாவைச் சேர்ந்த தருண் விஜய், ஹரித்வார், கேதார்நாத் கோவில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், திருவள்ளுவரின் புகழ் நாடு முழுவதும் பரவ முதல்வர் ஜெயலலிதா பேருதவி செய்ததாக அவர் கூறியுள்ளார். "முதல்வரின் உதவியால் தான் எங்களைப் போன்றவர் களுக்கு அங்கீகாரம் கிடைத்தது. அவர் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் வீடு திரும்ப வேண்டும். "இதற்காக ஹரித்வார், கங்கா கோவிலிலும், கேதாரீஸ்வரர் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன," என்று தருண் விஜய் மேலும் தெரிவித்தார்.