காஜிப்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஜிப்பூர் மாவட்டத்திலுள்ள காஜியா கிராமம் அருகே ஜீப் வாகனம் ஒன்று அங்குள்ள மங்கை ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் ஜீப்பில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 8 பேர் பலியாகினர். இச்சம்பவத்தில், பைஜ்நாத் பிந்த் (வயது 60), மன்ஷா தேவி (வயது 32), தேத்ரா தேவி (வயது 45), சாரதா தேவி (வயது 55) மற்றும் சுகாரி தேவி (வயது 18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். அதன் பின்னர் மருத்துவமனையில் ஜிதேந்திரா பிந்த் (வயது 15), பிங்கி (வயது 15) மற்றும் ராம்ராஜியா தேவி (வயது 55) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர் என்று போலிசார் கூறினர்.
உத்தரப் பிரதேசத்தில் ஆற்றுக்குள் வாகனம் கவிழ்ந்து 8 பேர் பலி
1 mins read

