ஸ்ரீநகர்: பாம்போர் தாக்குதல் முடிவுக்கு வந்தது

ஸ்ரீநகர்: பாம்போர் தாக்குதல் முடிவுக்கு வந்தது

1 mins read

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் பகுதியிலுள்ள பாம்போர் என்னும் இடத்தில் அரசுக்குச் சொந்தமான 7 மாடி கல்விக்கழகக் கட்டடத்திற் குள் தீவிரவாதிகள் கடந்த திங்­கட்கிழமை ஊடுருவினர். அதனை­யடுத்து அந்தக் கட்டடத்தைச் சுற்றி வளைத்த ராணுவ வீரர்கள், தீவிரவாதிகளுடன் கடந்த 60 மணி நேரமாக கடுமையாகப் போராடினர். அதில் புதன்கிழமை யன்று ஒரு தீவிரவாதி கொல்லப் பட்டான். இரண்டாவது தீவிரவாதி நேற்றுக் கொல்லப்பட்டான். மேலும் தீவிரவாதிகள் ஒளிந்திருக்கலாம் என்ற அச்சத்தின் பேரில் அந்தக் கட்டடம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள் இறங்கினர். தீவிரவாதிகள் யாரும் சிக்க வில்லை. ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற ஆயுதங்கள் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கட்டடத்தில் 60 அறை கள் உள்ளதாகவும் அதனால் அக் கட்டடத்தை முழுமையாகச் சோதனை செய்து அதன் பாது காப்பை உறுதிப்படுத்துவதற்கு ஓரிரு நாட்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.