பாகிஸ்தான் - ரஷ்யா கூட்டு ராணுவப் பயிற்சி: அதிருப்தியில் இந்தியா

பாகிஸ்தான் - ரஷ்யா கூட்டு ராணுவப் பயிற்சி: அதிருப்தியில் இந்தியா

2 mins read

புதுடெல்லி: இந்தியாவின் நீண்ட­கால நட்பு நாடாக ரஷ்யா இருந்து வந்தது. ஆனால் அண்மைகால­மாக பாகிஸ்தானுடன் அது நட்புப் பாராட்டி வருகிறது. அண்மையில் ரஷ்யா, பாகிஸ்தானிடையே கூட்டு ராணுவப் பயிற்சிகள் நடந்து வருகின்றன. உரி தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யா தனது கூட்டு ராணுவப் பயிற்சியை நிறுத்திக்­கொள்ளும் என இந்தியா எதிர்­பார்த்தது. ஆனால் ரஷ்யா திட்ட­மிட்டபடி பயிற்சியைத் தொடர்ந்து நடத்தி யது. இதனால் ரஷ்யா மீது இந்தியா கடும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பல வகைகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவு நிலையை ரஷ்யா எடுத்து வருகிறது. இதனால் ரஷ்யாவுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

இந்நிலையில் கோவாவில் நாளை மறுநாள் தொடங்கவிருக்­கும் 'பிரிக்ஸ்' கூட்டமைப்பின் 8வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யப் பிரதமர் புட்டின் இந்தியா வருகி­றார். 4 நாட்கள் அதிகாரபூர்வ பயணம் மேற் கொள்ளும் புட்டினை நாளை மறு நாள் பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார். அப்போது வர்த்தகம், பாதுகாப்பு குறித்து முக்கியமாகப் பேசுவார். '5எஸ்= 400 டிரிம்ப்' ஏவுகணைத் தடுப்புக் கேடயம், 'காமோவ்=28' ரக ஹெலிகாப்டர் களை வாங்குவது, சுகோய் 30 ரக விமானங்களை மேம்படுத்து வது குறித்து ரஷ்யப் பிரதமர் புட்டினிடம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து 5ஆம் தலைமுறை போர் விமானங்களைத் தயாரிப்பது குறித்தும் அகுலா கிளாஸ் அணு­சக்தி நீர்மூழ்கிக் கப்பலை ரஷ்யாவிடம் இருந்து குத்தகைக்­குப் பெறுவது குறித்தும் பேச்சு­ வார்த்தை நடத்தப்பட உள்ளது. அந்த சந்திப்பின்போது பாகிஸ்­தானுடன் இணைந்து ரஷ்யா பயிற்சி நடத்தியதற்கு இந்தியா ஆட்சேபம் தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.