ஜெயலலிதாவைக் காண அமித் ஷா, ஜெட்லி வருகை

ஜெயலலிதாவைக் காண அமித் ஷா, ஜெட்லி வருகை

1 mins read
73071b71-2140-49a7-88a3-69d139ea21df
-

சென்னை: முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய அருண் ஜெட்லி, அமித் ஷா (படம்) ஆகியோர் டுவிட்டர் பதிவு மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா உடல்நிலை குறித்துக் கேட்டறிய சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் நேற்று வந்தனர். சுமார் 30 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த அவர்கள் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர் குழுவிடம் கேட்டறிந்த தாகத் தெரிகிறது. மருத்துவ மனையில் இருந்து வெளியில் வந்த அவர்கள் செய்தியாளர் களிடம் பேச மறுத்துவிட்டனர்.