மும்பை: மும்பை போலிஸ் துறையில் மோப்ப நாய் படையில் சேர்ந்த இந்த சீசர், கடந்த 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மும்பை தாக்குதலின்போது பல வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து பல உயிர்களைக் காப்பாற்றி யது. இந்த 11 வயது போலிஸ் நாய் வியாழக் கிழமை மும்பை அருகே விகார் என்ற இடத்தில் மாண்டுவிட்டது. இந்த நாய் கடந்த 2008 நவம்பர் 26ஆம் தேதி தொடங்கிய மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது ஒரு ரயில் நிலையத்தில் பயங்கரவாதிகள் வைத்திருந்த வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டு பிடித்தது. மாரடைப்பு காரணமாக நாய் இறந்துவிட்டதாகவும் இந்த நாயின் தொண்டு என்றென்றும் நினைவுகூரப்படும் என்றும் மும்பை போலிஸ் தெரிவித்துள்ளது.
பலரைக் காத்த சீசர் மரணம்
1 mins read
-

