சென்னை: தமிழகத்திற்கு விரைவில் புதிய ஆளுநர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக ஆளுநராக பதவி வகித்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் கே. ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதியோடு முடிந்தது. இதனால் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக மராட்டிய மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருவதால் தமிழகத்திற்கு விரைவில் புதிய முழு நேர ஆளுநரை நியமிப்பது அவசியம் என மத்திய அரசு கருதுகிறது. இதனால் விரைவில் தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் புதிய ஆளுநர்
1 mins read

