சசிகலா புஷ்பா: சசிகலா நடராஜன்தான் காரணம்

சசிகலா புஷ்பா: சசிகலா நடராஜன்தான் காரணம்

2 mins read
a532bdd1-0cc1-4a72-99d1-585b00615c33
-

சென்னை: அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேட்டில் தம்மைப் பற்றிக் கடுமையாக விமர்சிக்கப் பட்டதற்கு சசிகலா நடராஜன்தான் காரணம் என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மேலவை நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா குற்றம் சாட்டியிருக்கிறார். "தனி வாழ்க்கையைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் அவ்வளவுதான். ஆனால் நான் அப்படி ஒருபோதும் பேச மாட்டேன். நான் அரசியல் நாகரிகம் இல்லாதவர் அல்ல," என்றார் அவர். "அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்ஜிஆரில் 'சாக்கடை புஷ்பாவின் பூக்கடை சமாச்சாரங்கள்' என்ற தலைப்பில் தம்மை விமர்சித்து எழுதியதற்கு காரணம் சசிகலா நடராஜன்தான்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சில நாட் களுக்கு முன்பு டெல்லியில் நடை பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சில சந்தேகங்களை சசிகலா புஷ்பா எழுப்பியிருந்தார். அப்போது ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜனையும் அவர் விமர்சித்திருந்தார். இதையடுத்து 'நமது எம்ஜிஆர்' நாளேட்டில் 'சாக்கடை புஷ்பாவின் பூக்கடை சமாச் சாரங்கள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. அக்கட்டுரையில் சசிகலா புஷ்பா பற்றி கடுமையாக விமர் சிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தம்மை விமர் சித்து எழுதப்பட்டதற்கு சசிகலா புஷ்பா பொங்கியெழுந்துள்ளார்.

"ஒரு பெண்ணை இதற்கு மேல் யாரும் கேவலப்படுத்த முடியாது. அவர்களும் பெண்கள்தான். அப்படி நான் ஒன்றும் அவர் களுக்குத் தீங்கு இழைக்கவில்லை. என்னுடைய வளர்ச்சி பிடிக்கவில்லை. "என்னைக் கவிழ்க்க நினைத் தார்கள். எவ்வளவோ பிரச்சினை கொடுத்தார்கள். நான் பயப்படவில்லை. "இப்போது மக்களிடம் எனக்கு உள்ள நல்ல பெயரைக் கெடுக்க நினைக்கிறார்கள். "இதற்கு எல்லாம் காரணம் சசிகலா குடும்பத்தினர் மட்டுமே. அவர்களுடைய பத்திரிகை என்ற காரணத்தால் கண்டபடி என்ன வேண்டுமானாலும் எழுது கிறார்கள்," என்று வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சசிகலா புஷ்பா தெரிவித்தார்.