போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள போபாலைச் சேர்ந்த 45 வயது விக்ரம் அக்னி ஹோத்ரிக்கு கைகள் இல்லை. ஆனால் கால்களால் லாவகமாக காரை ஓட்டுவதால் அவருக்கு முறைப்படி ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஏழு வயதில் விபத்தில் சிக்கி அவர் கைகளை இழந்தார். இரு கைகள் இல்லாததால் வாகனம் ஓட்ட முடியாது என்று கூறி பல ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் அவருக்குப் பயிற்சியளிக்க மறுத்துவிட்டன. இந்நிலையில் சற்றும் மனம் தளராமல் அவர் ஒரு காலால் 'ஸ்டியரிங்'கை திருப்பியும் மற்றொரு காலால் கியரை மாற்றியும் வாகனத்தை ஓட்டக்கற்றுக்கொண்டார்.
கால்களால் காரை ஓட்டும் விக்ரம். படம்: இந்திய ஊடகம்

