இந்தியா - ரஷ்யா ஒப்பந்தம்

இந்தியா - ரஷ்யா ஒப்பந்தம்

2 mins read
e1f6bae9-4adc-4b04-86dc-9f56cafaa019
-

பனாஜி: இந்தியாவும் ரஷ்யாவும் கூடங்குளம் புதிய அணு உலை உட்பட 16 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளன. பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா வின் கோவா மாநிலத்துக்கு வந்த ரஷ்ய அதிபர் புட்டின், பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது மோடி - புட்டின் முன்னிலையில் பாதுகாப்பு எரி சக்தி, கல்வித் தொடர்பான 16 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத் தாகின. இதில் இரு நாடுகளும் இணைந்து ராணுவத்துக்கு 200 ஹெலிகாப்டர்களைத் தயாரிக்கும் ஒப்பந்தமும் அடங்கும்.

அரியானா, ஆந்திராவில் 'ஸ்மார்ட் சிட்டி' அமைப்பது அதிநவீன ஏவுகணைகளை வாங்குவது உட்பட முக்கிய ஒப் பந்தங்களில் நேற்று இரு நாடு களும் கையெழுத்திட்டன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கிய 'பிரிக்ஸ்' என்ற அமைப்பின் உச்ச மாநாடு ஆண்டுதோறும் வெவ் வேறு நாட்டில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு மாநாடு ரஷ்யா வின் உபா நகரில் நடந்தது. இவ் வாண்டின் இரண்டு நாள் பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் கோவா மாநிலத் தலைநகரான பனாஜி நகரில் நடைபெறுகிறது.

முதல் நாளில் பிரிக்ஸ் மற்றும் இந்தியா, வங்காளதேசம், பூடான், மியான்மார், நேப்பாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங் கிய வங்கக் கடற்பகுதியில் பல் துறை தொழில்நுட்பம், பொருளியல் ஒத்துழைப்புக்கான 'பிம்ஸ்டெக்' அமைப்பு மாநாடு நடக்கிறது. இதையடுத்து 'பிரிக்ஸ்' நாடு களின் தலைவர்கள் பங்கேற்கும் உச்ச மாநாடு இன்று நடைபெறு கிறது. இதன் மூலம் பாகிஸ்தானை ஓரம் கட்டி இந்தியாவின் செல் வாக்கை உயர்த்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் நேற்று இந்தியா வந்து சேர்ந்தார்.

இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை வரவேற்ற பிரதமர் மோடி. படம்: ஏஎஃப்பி