இந்தியாவில் குடிநீரை அதிக விலைக்கு விற்றால் சிறை

இந்தியாவில் குடிநீரை அதிக விலைக்கு விற்றால் சிறை

2 mins read
b3e5cbb5-d4e2-42d1-a626-763010323b3e
-

குடிநீரையும் குளிர் பானங்களையும் அதற்கென குறிப்பிடப்பட்ட விலைக்கு மேல் விற்றால் அபராதம், சிறைத் தண்டனை ஆகியவை விதிக்கப் படும் என இந்திய பயனீட்டாளர் விவகார அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் எச்சரித்துள்ளார். விமான நிலையங்கள், உணவ கங்கள், கடைத் தொகுதிகள் உள் ளிட்ட பல இடங்களில் அதிகபட்ச சில்லறை விலை (எம்ஆர்பி) என்பதையும் தாண்டி கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக மத்திய பயனீட்டாளர் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்திருப்பதாக அவர் சொன்னார். 47வது உலகத் தர தினத்தை முன்னிட்டு புதுடெல்லியில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசும்போது பாஸ்வான் இதனைக் குறிப்பிட்டார்.

"குடிநீர் என்பது மனிதனின் அத்தியாவசியத் தேவை. அதனை போத்தல்களிலும் பாக்கெட்டுகளி லும் அடைத்து விற்பவர்கள் எம்ஆர்பி விலையை விட பத்து முதல் இருபது விழுக்காடு வரை கூடுதலாக விற்கிறார்கள். "சில போத்தல்களில் எம்ஆர்பி விலை குறிப்பிடப்படவில்லை. உண்மையான விலையைப் பயனீட் டாளர்கள் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அப்படிச் செய்யப்படு கிறது. "குடிநீர், குளிர்பானங்கள் ஆகி யவற்றை விற்பதற்குப் பல விதிகள் நடப்பில் உள்ளன. தரத்தைக் கடைப்பிடிப்பதும் நியாய விலையில் விற்பதும் அந்த விதிகளில் அடங் கும். "விதிகளை மீறுவோருக்கு தொடக்கமாக 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

"இரண்டாவது முறை விதிமீற லுக்கு ரூ.50,000 அபராதம் விதிக் கப்படும். அதிக விலைக்கு விற் பதை வழக்கமாக்கிக்கொண்டு அதனைத் தொடருவோருக்கு அதிக பட்சமாக ஒரு லட்ச ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது இந்த இரண்டும் சேர்த்து விதிக்க சட்டத் தில் இடமுண்டு," என்று எச்சரித் தார் திரு பாஸ்வான். கடந்த பிப்ரவரி மாதம் குடிநீரை அதிக விலைக்கு விற்ற கடைத் தொகுதி ஒன்றுக்கு தேசிய பயனீட் டாளர் உரிமைப் பாதுகாப்புக் குழு ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.