ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட 6 ஆடவர்கள் இம் மாதத் தொடக்கத்தில் கேரள மாநி லத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நிறைவேற்ற வேண்டிய செயல்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் என்னவென்று இப் போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த அறுவரும் குறைந்தபட்சம் மூவரின் தலையை துண்டிக்க வேண்டும் என்றும் அவர்களில் இருவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் ஒருவர் பாரதிய ஜனதா கட்சியையும் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றும் ஆப் கானி-ஸ்தானில் இருந்து வழிநடத் தும் ஒருவர் உத்தரவிட்டாராம். அவ்வாறு தலை துண்டிக்கப் படும் செயலை காணொளியில் பதிவு செய்து அனுப்பும்படியும் அவர்களுக்குச் சொல்லப்பட்டதாக புலன் விசாரணையில் தெரிய வந் திருப்பதாக இந்திய உள்துறை அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆறுபேரில் ஒருவரான அபு பஷீர் எனப்படும் ரஷித், 29, என்பவர் தமக்கு கூர்மை யான வாள்களைத் தரும்படி தம்மை இயக்குபவரிடம் கேட்ட தாகவும் அந்த அதிகாரி தெரி வித்தார். அந்த உத்தரவுகளை நிறை வேற்றும் பொருட்டு மன்சீட் என் பவர் கத்தாரில் இருந்து கேரளா வந்ததாகவும் தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் முக்கிய அரசியல் தலைவர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த மலை உச்சி ஒன்றில் இதர ஐவருடன் திட்டம் தீட்டியபோது அனைவரும் பிடி பட்டதாகவும் அவர் கூறினார்.

