சீனப் பொருட்களைப் புறக்கணிக்கக் கோரி 21 கி.மீ. நீளத்திற்கு மனிதச் சங்கிலி

சீனப் பொருட்களைப் புறக்கணிக்கக் கோரி 21 கி.மீ. நீளத்திற்கு மனிதச் சங்கிலி

1 mins read
9e9deac0-aee6-474b-b307-b9f684892024
-
Google News Preferred Icon

பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட் டைக் கொண்டுள்ளதால் சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்ற முழக்கம் அண்மைக்கால மாக இந்தியாவில் ஒலித்து வருகிறது. அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் நகரில் சீனப் பொருட்களை வாங்க வேண்டாம் என வலியுறுத்தி, 21 கி.மீ. நீள மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. "தனது உற்பத்திப் பொருட் களை இந்தியாவில் விற்பதன் மூலம் சீனா அதிக வருமானம் ஈட்டி வருகிறது. அதே வேளையில், பாகிஸ்தானுக்கான நிதி உதவியையும் அது அதிகரித்து இருக்கிறது.

அப்படி சீனாவிடம் இருந்து பெறும் பணத்தை இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கை களுக்குப் பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது," என்று சொன்னார், அந்த மனிதச் சங்கி லிக்கு ஏற்பாடு செய்த இந்து உத்சவ் சமிதி அமைப்பைச் சேர்ந்த திரு முகேஷ் மோடி. 'சீனப் பொருட்களை வாங்கு வது பயங்கரவாத நாட்டிற்கு மறைமுகமாக ஆதரவு தருவதா கும். ஆகவே, சீனப் பொருட் களைப் புறக்கணிப்போம்' என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைப் போராட்டத்தில் பங்கேற்றோர் ஏந்தியிருந்தனர்.

சீனப் பொருட்களை வாங்குவது பயங்கரவாத நாட்டிற்கு மறைமுகமாக ஆதரவு தருவதாகும் என்பது போன்ற வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி இந்தூர்வாசிகள் சுமார் 30,000 பேர் கைகோத்து மனிதச் சங்கிலியை அமைத்திருந்தனர். படம்: இந்திய ஊடகம்