அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது

அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது

1 mins read

சென்னை: நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர் வசம் இருந்த முக்கிய துறைகளுக்கும் பொறுப்பேற்றுள்ளார் பன்னீர்செல்வம். அதன் பின்னர் அவர் தலைமையில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். ஏறத்தாழ ஒருமணி நேரம் பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.