இந்தியாவில் இயங்கிய போலி அழைப்பு மையங்கள் (கால் சென்டர்) அமெரிக்காவில் வரி செலுத் தத் தவறியவர்களை மிரட்டி பல மில்லியன் டாலர் பணம் பறித்த மோசடி செய்த சம்பவம் அண்மை யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மும்பை அருகே தானே என் னும் பகுதியில் இயங்கிய மூன்று அழைப்பு மையங்களில் போலி சார் அதிரடிச் சோதனை நடத்தி அவற்றில் பணியாற்றிய 770 ஊழியர்களைச் சுற்றி வளைத் தனர். அவர்களில் 72 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த மோசடிச் செயலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட 23 வயது இளையரை போலிஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.
மேலும், தானேயில் மட்டுமல் லாது குஜராத் நகர் அகமதா பாத்திலும் சில அழைப்பு மையங் களில் போலிசார் சோதனை நடத்தி சிலரைப் பிடித்துச் சென்றுள்ளனர். இதுபோல் ஏராளமான போலி அழைப்பு மையங்கள் மோசடிச் செயல்களில் ஈடுபட்டு வருவ தாக போலிஸ் சந்தேகிக்கிறது. எனவே, டெல்லி வரையில் சோதனையை நீட்டிக்கத் திட்டம் தீட்டி வருகிறது. இதற்கிடையே, ஏற்கெனவே மோசடி செய்யப் பட்டது தொடர்பான விசாரணை யில் அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவை அதிகாரிகளு டன் மும்பை போலிசார் இணைந்து பணியாற்றி வரு கின்றனர். மும்பை, அகமதாபாத் ஆகியவற்றோடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மோசடி பரவி இருப்பதாக மும்பை போலிஸ் ஆணையர் பரம்பீர் சிங் தெரிவித்தார்.

