ராமஜெயம் கொலை வழக்கு: காவல்துறைக்கு இறுதிக்கெடு

ராமஜெயம் கொலை வழக்கு: காவல்துறைக்கு இறுதிக்கெடு

1 mins read

மதுரை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இளைய சகோதரர் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை. இந்நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலிசாருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை இறுதிக்கெடு விதித்துள்ளது. கடைசி வாய்ப்பாக மேலும் 3 மாதகாலம் அவகாசம் அளிப்பதாக வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி பசீர் அகமது தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். வழக்கு விசாரணை வரும் ஜனவரி 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.