நெய்வேலி: தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாட காவுக்கு மின் விநியோகிப்பை நிறுத்த வேண்டும் என்று கோரி தமிழக விவசாயிகள் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரி யத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரு கின்றன. இந்த நிலையில் கர்நாடகாவுக்கு தமிழகத்திலிருந்து விநியோகிக்கப் படும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியிருக்கின்றனர். கர்நாடகாவுக்கு நெய்வேலியில் உள்ள என்எல்சி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.
இதனால் என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் லாரிகளிலும் டிராக்டர்களிலும் வந்து நெய்வேலியில் குவிந்தனர். முற்றுகைப் போராட்டத்துக்கு மாநிலத் தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் பங்கேற்ற விவ சாயிகளில் பலர் தங்கள் மேல் சட் டையில் 'நாமம்' வரைந்த தாளை குத்தியிருந்தனர். இதற்கிடையே காவல்துறை யினரும் அங்கு குவிக்கப்பட் டனர். மத்திய அரசையும் கர்நாடக அரசையும் கண்டித்து முழக்க மிட்டபடி வந்த விவசாயிகளை காவல்துறையினர் பாதி வழியில் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி முற்றுகையிடும் முயற்சியில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

