போலி ஆவணங்கள்; மதுரையில் 500 பாஸ்போர்ட்டுகள் முடக்கம்

போலி ஆவணங்கள்; மதுரையில் 500 பாஸ்போர்ட்டுகள் முடக்கம்

1 mins read

மதுரை: மதுரை, நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட ஒன்பது மாவட்டங்களில் சுமார் 500 பாஸ்போர்ட்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பனீஸ்வர ராஜா தெரிவித்தார். இது குறித்து விளக்கம் அளித்த அவர், "போலி ஆவணங்களைத் தந்து பாஸ்போர்ட் பெற்ற 500 பேரின் 'இசிஎன்ஆர்' பாஸ்போர்ட்டுகள் முடக்கப்பட்டுள்ளன," என்றார். "போலி ஆவணங்கள் தந்து பாஸ்போர்ட் பெற்ற 500 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது," என்றும் அவர் தெரிவித்தார்.