புதுடெல்லி: தமிழகத்தில் பயங்கரவாத இயக்கங்களின் செயல்பாடு அதிகரித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை புதுடெல்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். அப்போது தமிழகத்தில் அடுத்தடுத்து இந்து முன்னணி, பாஜகவினர் படுகொலை செய்யப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். "கொலை வெறித் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்வது குறித்து துரித நடவடிக்கை எடுக்க ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தினேன்," என பொன்.ராதாகிருஷ்ணன் பின்னர் தெரிவித்தார்.
பயங்கரவாத இயக்கங்கள் குறித்து மத்திய அரசிடம் பொன்.ராதா புகார்
1 mins read

