வழக்கறிஞர் வீடு மீது தாக்குதல்: முன்பிணை கோரும் சசிகலா புஷ்பா

வழக்கறிஞர் வீடு மீது தாக்குதல்: முன்பிணை கோரும் சசிகலா புஷ்பா

1 mins read
6a9f5583-b240-4a5e-b634-d7929bbb5898
-

நெல்லை: பெண் வழக்கறிஞர் சுகந்தியின் வீடு தாக்கப்பட்டது தொடர்பில் காவல்துறை தம்மைக் கைது செய்யாமல் இருக்க முன்பிணை கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மாநிலங் களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மனுத்தாக்கல் செய்துள்ளார். சசிகலா புஷ்பா மீது பாலியல் புகார் கொடுத்த இளம்பெண்கள் இருவருக்கும் ஆதரவளித்து, அவர்களுக்காக வழக்கை நடத்தி வருகிறார் சுகந்தி. இந்நிலையில் அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு சசிகலா புஷ்பா காரணமாக இருக்கலாம் என ஆருடங்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில் அவர் முன்பிணை கோரியுள்ளார்.