புதுடெல்லி: இந்திய நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்புப் படையினருக்குத் தீபாவளி வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களுக்குத் தீபாவளி வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் சிறப்பு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த காணொளி தற்போது, பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வேகமாகப் பரவி வருகிறது. மக்கள் தங்கள் வாழ்த்துச் செய்தியை நரேந்திர மோடி ஆப் மூலமாகவும், மைகவ்.இன் மூலமாகவும் ரேடியா மூலமாகவும் தெரிவிக்கலாம். தூர்தர்ஷன் பாதுகாப்புப் படையினருக்கு மக்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்க சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
பாதுகாப்புப் படையினருக்கு தீபாவளி வாழ்த்து: மோடி அழைப்பு
1 mins read

