பலியான ராணுவ வீரர் பெயரில் மருத்­து­வ­மனை: குடும்பம் கோரிக்கை

பலியான ராணுவ வீரர் பெயரில் மருத்­து­வ­மனை: குடும்பம் கோரிக்கை

1 mins read

ஜம்மு: இந்திய எல்லை­யில் பாகிஸ்­தான் நடத்­திய அத்­து­மீ­றிய தாக்­கு­த­லில் காயம் அடைந்த 26 வயது ராணுவ வீரர் குர்னாம் சிங் சனிக்­கிழமை இரவு மரணம் அடைந்தார். வீர­ம­ர­ணம் அடைந்த குர்ணம் சிங் பற்றி தாயார் ஜஸ்­வந்த் கவுர், "என் மகன் ராணு­வத்­தில் சேர்ந்த­தும் நான் வீர மரணம் அடைந்தால் அழக்­கூ­டாது என்று சொன்னான். அதன்­படி நான் அழ­மாட்­டேன்," என்றார். "காயம் அடைந்த வீரர்­களுக்­குச் சிகிச்சை அளிக்க சிறப்­பான மருத்­துவ வச­தி­கள் தேவை. குர்னாம் சிங் காயம் அடைந்த­தும் அருகில் உள்ள பாக்‌ஷி நகர் மருத்­து­வ­மனை­யில் சேர்த்­த­னர்.

எல்லைப்­பா­து­காப்­புப் படை வீரர்­களுக்­குத் தனியாக மருத்­து­வ­மனை இருந்­தி­ருந்தால் என் மகனைக் காப்­பாற்றி இருக்­க­லாம். எனவே நமது வீரர்­களுக்­குச் சிகிச்சை அளிக்க நல்ல மருத்­து­வ­மனை தேவை எனப் பிர­த­மர் மோடிக்கு வேண்­டு­கோள் விடுக்­கி­றேன்," என்று தந்தை குல்பீர் சிங் கூறி­யுள்­ளார். குர்னாம் சிங்கின் சகோதரி குர்ஜித் கவுர், எல்லைப் பாது­காப்­புப் படைக்கு என்று தனியாக என்­னுடைய சகோ­த­ரன் பெயரில் மருத்­து­வ­மனை கட்­டப்­ப­ட­வேண்­டும் என்று மத்திய அர­சுக்கு கோரிக்கை விடுத்­துள்­ளார்.