டெல்லியைச் சேர்ந்த கபில் சர்மா, 47, சுரேஷ் சர்மா, 42, ஆகிய இரு தொழிலதிபர் சகோதரர்களையும் (வலக்கோடியில்) 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நக்சல் நடமாட்டம் அதிகமுள்ள பாட்னாவின் தென்கிழக்கு மலைப்பகுதியில் இருந்து பாட்னா போலிசார் மீட்டுள்ளனர். இந்த இரு சகோதரர்களின் கடத்தல் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரு சகோதரர்களும் பாட்னா விமான நிலைய வளாகத்தில் அக்டோபர் 21ஆம் தேதி கடத்தப்பட்டனர். கடத்தல்காரர்கள் சகோதரர்களைப் பத்திரமாக திருப்பி ஒப்படைக்க ரூபாய் 4 கோடி பிணைப்பணம் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம்: ஊடகம்
ரூ.4 கோடிக்காக கடத்தல்; சகோதரர்கள் மீட்பு
1 mins read
-

