வண்ணக் கோலமிட்டு தீபாவளியை வரவேற்ற மாணவிகள்

வண்ணக் கோலமிட்டு தீபாவளியை வரவேற்ற மாணவிகள்

1 mins read
3bd7d181-83a7-44da-9dc8-0df3c8fae9f4
-

உலகம் முழுவதும் நாளை தீபாவளிப் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகரில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன. அங்குள்ள தனியார் கல்லூரி மாணவிகள் தீபாவளிப் பண்டிகையை வரவேற்கும் விதமாக தங்கள் கல்லூரி வளாகத்தில் பல வண்ணப் பொடிகளால் அழகுக் கோலமிட்டு அதில் தீபங்களை ஏற்றி வைத்து மகிழ்ந்தனர். சீனப் பட்டாசுகளின் வருகை குறைந்ததால் இந்தாண்டு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளின் விற்பனை ஓரளவு அதிகரித்துள்ளது. படம்: சதீஷ்