14 பழங்கால சிலைகள் பறிமுதல்: கடத்தல்காரர்கள் மூவர் கைது

14 பழங்கால சிலைகள் பறிமுதல்: கடத்தல்காரர்கள் மூவர் கைது

1 mins read

சென்னை: பல கோடி மதிப்புள்ள 14 பழங்கால சிலைகளை வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள் ளனர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த இருவரும், மும்பையில் ஒருவரும் கைதாகியுள்ளனர். தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த பாலாஜி, ஓம்காரம் ஆகியோரின் வீடுகளில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டபோது 14 பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவை வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இருவரும் சிலை கடத்தல் காரர்களான தீனதயாளன், உதித் ஆகியோருக்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் ஆவர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் ஒருவர் மும்பையில் கைது செய்யப்பட்டார்.