முதன்முறையாக ஐநா தலைமையகத்தில் தீபாவளி ஒளியூட்டு

முதன்முறையாக ஐநா தலைமையகத்தில் தீபாவளி ஒளியூட்டு

1 mins read

ஐக்கிய நாடுகள் சபையில் முதன் முறையாக தீபா­வ­ளிப் பண்டிகை கொண்டா­டப்­பட்­ட­தாக ஐநா­வுக்­கான இந்­தி­யா­வின் நிரந்த­ரப் பிர­தி­நிதி சையது அக்­ப­ரு­தீன் தமது 'டுவிட்­டர்' செய்­தி­யில் தெரி­வித்­துள்­ளார். இந்தச் செயலுக்காக ஐநா சபைக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகக் கட்டத்தின் முகப்பில் 'தீபாவளி வாழ்த்துகள்' என விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுற்றுலாப் பயணிகள், நியூயார்க் வாசிகள் எனப் பலரும் அந்தக் கட்டடத்தின் முன்பு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இன்று வரை இந்த ஒளியூட்டு கட்டடத்தில் இருக்கும் என்று கூறப்பட்டது.