வில்சன் சைலஸ்
குடும்பத்தினர் அருகில் இல்லை என்ற ஏக்கம் வராத அளவிற்கு தீபாவளியைக் குதூகலத்துடன் கொண்டாடினார் வெளிநாட்டு ஊழியர் திரு மணி கந்தசாமி, 44. நீர்க்காப்புச் செய்பவராக கோல்ட்ஃபீல்ட் கட்டுமான நிறுவ னத்தில் கடந்த 18 ஆண்டுகளாக வேலை செய்து வரும் இவர், இந்த ஆண்டும் தீபாவளியை சக ஊழி யர்களுடன் முதலாளியுடனும் கொண்டாடி மகிழ்ந்தார். பிரியமானவர்களைப் பிரிந்து பிழைப்புக்காக சிங்கப்பூர் வந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடந்த 19 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ஏற் பாடு செய்து வருகிறார் கோல்ட் ஃபீல்ட் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் திரு சேம் குவீ, 44.
வெவ்வேறு உணவகங்களுக் குச் சென்று தமது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விருந்து வைக் கும் திரு சேம், தோ குவானில் உள்ள தமது புதிய நிறுவனத்தில் கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து பெரியளவிலான கொண்டாட் டத்தை ஏற்பாடு செய்து வருகிறார். ஆடல், பாடல், அறுசுவை உணவு ஆகியவற்றுடன் கயிறு இழுத்தல், கை பலத்தைச் சோதிக் கும் 'ஆர்ம் ரெஸ்லிங்' போன்ற விளையாட்டுப் போட்டிகளிலும் கோல்ஃபீல்ட் நிறுவனத்தின் வெளிநாட்டு ஊழியர்கள் உற்சாகத் துடன் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டு இந்திய ஊழியர்கள் தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது 'ஆர்ம் ரெஸ்லிங்' போட்டியில் இருவர் தங்கள் திறனை வெளிப்படுத்துவதை நிறுவனத்தின் முதலாளியும் ஊழியர்களும் பார்த்து மகிழ்கின்றனர். படம்: கோல்ட்ஃபீல்ட் நிறுவனம்

