ஹைதராபாத்: தெலுங்கானா மாநில அரசின் வாஸ்து ஆலோசகராக சுத்தாலா சுதாகர் தேஜா, 50 என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம், அமைச்சர் தகுதிக்கு ஈடானது என்பதால் அவர் அமைச்சருக்கு உரிய சலுகைகளையும் மரியாதை களையும் பெற்று வருகிறார். இதனால் தெலுங்கானா மாநிலத்தில் புதிய சாலை, கட்ட டங்கள் கட்டுவதற்கு வாஸ்து சாஸ்திர நிபுணர் சுத்தாலா சுதாகர் தேஜாவின் ஆலோசனையைப் பெற வேண்டும். இவரது ஒப்புதல் இல்லாமல் மாநிலத்தில் அரசு கட்டடங் களையோ, சாலைகளையோ அமைக்க முடியாது.
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி உள்ள மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் வாஸ்து சாஸ் திரத்தின் மீது அதீத நம்பிக்கைக் கொண்டவர். முதல்வராக பதவியேற்ற பின் சாலை, கட்டடங்கள் கட்டுவதற்கு வாஸ்து சாஸ்திர நிபுணர் சுத்தாலா சுதாகர் தேஜாவை வாஸ்து ஆலோசகராக நியமித்துள்ளார். இந்த நிலையில் ஹைதரா பாத்தில் உசைன் சாகர் ஏரிக்கு அருகில் அமைந்துள்ள தலைமை செயலகம் வாஸ்துபடி சரியில்லை என்பதற் காக அதை இடித்துவிட்டு 1,200 கோடி ரூபாய் செலவில் அமையும் புதிய கட்டடம், ஹைத ராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் சந்திரசேகர ராவின் வீடு, முதல் வருக்கான அரசு இல்லம், என்டி ஆர் கார்டன்சில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை, தெலுங்கானா தியாகிகள் நினைவிடம் போன்ற இடங்கள் தேஜாவின் ஆலோ சனைப்படி வடிவமைக்கப்படுகிறது.

