ரயிலில் புகுந்து பெண்களிடம் கொள்ளை

ரயிலில் புகுந்து பெண்களிடம் கொள்ளை

1 mins read

வேலூர்: காட்பாடிக்கு அருகே நீலகிரி விரைவு ரயிலில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் ரயில் பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரயில் சமிக்கைக்காகக் காத்திருந்தபோது ரயிலில் ஏறிய மர்ம நபர்கள் அங்கிருந்த நான்கு பெண்களிடம் கத்தியைக் காட்டி நகைகளைக் கழற்றும்படி மிரட்டினர். இதனால் நால்வரும் தங்களுடைய நகைகளையும் கொடுத்தனர். மேலும் பயணிகளிடம் இருந்த பணத்தையும் மர்மக் கும்பல் சூறையாடி தப்பியது. இந்த நிலையில் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.