முன்னாள் காவல்துறை அதிகாரி கைது

முன்னாள் காவல்துறை அதிகாரி கைது

1 mins read

சென்னை: ஓராண்டுக்கு முன்பு ஜெயபால் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் நொளம்பூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் லட்சுமணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறிய அவர் ரூ. 65 லட்சம் மோசடி செய்துள்ளதாக புகார் மனுவில் திரு ஜெயபால் தெரிவித்திருந்தார். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திய நிலையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து லட்சுமணன் கைதானார்.