சென்னையை மிரட்டும் மழை

சென்னையை மிரட்டும் மழை

1 mins read

சென்னை: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தைப் புரட்டிப்போட்ட மழையால் சென்னை, கடலூர், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. இதில் மிகவும் பாதிக்கப்பட்ட சென்னையின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் 421 பேர் உயிரிழந்தனர். பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து களும் சேதம் அடைந்தன. இந்த நிலையில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் இவ்வாண்டும் கடும் மழை சென்னையை மிரட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைளை முடுக்கிவிட்டு உள்ளது. மேலும் வெள்ளப் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் அரசு அதிகாரிகள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை ஆராய்ந்து வரு கின்றனர். ஒவ்வொரு பகுதிக்கும் வெள்ள நிவாரணப் பணிகளை மேற் கொள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே நிவாரணப் பணிக்குழுவில் காவல்துறை உயர் அதிகாரிகளும் இணைக்கப்பட்டு உள்ளனர். கடலோர மாவட்டங்களுக்கும் காவல்துறை உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.