மொடக்குறிச்சி: ஈரோட்டில் மீன் வலையில் நடராஜர் சிலை சிக்கியதால் மீனவர்களிடையே அதிர்ச்சி அலை பரவியது. மொடக்குறிச்சி அருகே மன்னதாம்பாளையம் கிராமம் வழியாகச் செல்லும் காவிரி ஆற்றில் மீனவர்கள் நேற்று முன் தினம் மீன்பிடித்துக் கொண்டிருந் தனர். அப்போது மீனவர்களில் ஒரு வரான செல்வராஜ் என்பவர் மீன் பிடிப்பதற்காக மீன் வலையை வீசியிருக்கிறார். அதில் மீன்களுடன் ஒரு நடராஜர் சிலையும் சிக்கியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் அந்தச் சிலையை ஆச் சரியத்துடன் பார்த்தனர். அது ஐம்பொன் நடராஜர் சிலை எனத் தெரியவந்தது. அந்தச் சிலை சுமார் 200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நம்புகின்றனர்.
மீன் வலையில் சிக்கிய சிலை
1 mins read
-

