தனியார் தொலைக்காட்சிக்கு தடை: கருணாநிதி கண்டனம்

தனியார் தொலைக்காட்சிக்கு தடை: கருணாநிதி கண்டனம்

1 mins read

சென்னை: என்டிடிவி தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்புக்கு விதிக்கப்பட்டுள்ள 24 மணி நேர தடைக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயல் என்று அவர் கூறியுள்ளார். "இந்தப் பிரச்சினையில் பிரதமர் மோடி நேரடியாகத் தலையிட்டு ஜனநாயக உரிமைக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் இந்த ஆட்சியில் இனி எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை வெளியிட முன் வர வேண்டும்," என கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.