தமிழக மக்களின் தோள்களில் கடன் சுமை: எ.வ.வேலு குற்றச்சாட்டு

தமிழக மக்களின் தோள்களில் கடன் சுமை: எ.வ.வேலு குற்றச்சாட்டு

fallback

06 Nov 2016 - 11:06 am

1 mins read

கரூர்: மூன்று தொகுதிகளுக்கான தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நம்பிக்கை தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சியில் நடைபெற்ற திமுக பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழக மக்களின் தோள்களில் அதிமுக அரசு இரண்டரை லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை ஏற்றி வைத்துள்ளதாகச் சாடினார்.

"தமிழகத்தில் தற்போது கடன்கார ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சிந்தித்துப் பார்த்து, மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்," என்றார் எ.வ.வேலு.