முன்பு என்டிடிவி; இப்போது மேலும் இரு ஊடகங்களுக்கு ஒரு நாள் தடை

முன்பு என்டிடிவி; இப்போது மேலும் இரு ஊடகங்களுக்கு ஒரு நாள் தடை

1 mins read

புதுடெல்லி: இரு தினங்களுக்கு முன், நவம்பர் ஒன்பதாம் தேதி முழுவதும் என்டிடிவி இந்தியா தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை விதித்தது மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சு. இப்போது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிதின் டைம் (நியூஸ் டைம் அசாம்), ஹர்வேர்ல்டு ஆகிய இரண்டு தொலைக்காட்சிகளும் அதே நவம்பர் ஒன்பதாம் தேதி அன்று ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. வீட்டு வேலை செய்தபோது கொடூரமாகத் துன்புறுத்தப்பட்ட ஒரு இளம் சிறுவனின் அடையாளத்தை வெளிக்காட்டியதற்காக பிரதிதின் டைம் தொலைக்காட்சிக்கும் ஆட்சேபணைக்குரிய தகவல்களை ஒளிபரப்பியதற்காக ஹர்வேர்ல்டு தொலைக்காட்சிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது.