தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேறுகால விடுப்பு 9 மாதங்களாக அதிகரிப்பு

1 mins read

சென்னை: தமிழக அரசு ஊழியர்க ளின் பேறுகால விடுப்பு ஒன்பது மாதங்களாக அதிகரிக்கப்பட் டுள்ளது. இதற்கு அரசு ஊழியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ஒன்பது மாத பேறுகால விடுப் புக்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலர் சுவர்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பேறுகால விடுப்பு 180 நாட்களிலிருந்து 270 நாட்களாக உயர்த்தப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.