வடக்கு டெல்லியின் சதார் பஜாரில் உள்ள குடிசைப் பகுதியில் சுமார் 300 வீடுகளில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இங்கு ஆயிரக்கணக்கானோர் தங்கியுள்ளனர். இதன் காரணமாக கிட்டத்தட்ட 700 பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு 30 தீயணைப்பு வண்டிகளுடன் விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தத் தீவிபத்தில் நால்வர் காயமடைந்தனர். மத்திய டெல்லியில் உள்ளது சதார் பஜார். இந்தத் தீ விபத்திற்கான காரணம் குறித்து தகவல் எதுவும் இதுவரை தெரிய வில்லை. படம்: ராய்ட்டர்ஸ்
டெல்லி சதார் குடிசைப் பகுதியில் தீ விபத்து; நால்வர் காயம்
1 mins read
-

