எரிக்கப்பட்ட பணம் குறித்து விசாரணை

எரிக்கப்பட்ட பணம் குறித்து விசாரணை

1 mins read

பரேலி: கருப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் நாடு முழுவதும் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம், பரேலியில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், கிழிக்கப்பட்ட நிலையிலும் கிடந்த ரூபாய் நோட்டுகளைக் கைப்பற்றியுள்ள காவல்துறையினர், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.