போலிச் சாமியாரின் நாக்கை அறுத்த மூன்று பேர் கைது

போலிச் சாமியாரின் நாக்கை அறுத்த மூன்று பேர் கைது

1 mins read

முதுகுளத்தூர்: போலிச் சாமியாரின் நாக்கை அறுத்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் முதுகுளத்தூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். முதுகுளத்தூரைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் புது வீடு கட்டுவதில் தடைகள் ஏற்பட்டதையடுத்து முத்துக்குமார் என்ற சாமியாரை அணுகியுள்ளார். வீட்டில் சிறப்பு பூசை செய்வதாகக் கூறிய சாமியார் முத்துக்குமார், முனியாண்டியின் மனைவி அதில் நிர்வாணமாக பங்கேற்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனியாண்டி, தனது உறவினர்கள் இருவருடன் சேர்ந்து முத்துக்குமாரின் நாக்கை அறுத்து வீசினார். இதையடுத்து மூவரும் கைதாகியுள்ளனர்.