'இந்தியா-இலங்கை பாலம் அமைக்க அரசு தயார்'

'இந்தியா-இலங்கை பாலம் அமைக்க அரசு தயார்'

1 mins read

ராமேசுவரம்: தமிழகத்தின் தனுஷ் கோடிக்கும் இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையே கடல்வழி பாலம் அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ் ணன் தெரிவித்தார். தனுஷ்கோடி-அரிச்சல்முனை இடையே அமைக்கப்பட்ட புதிய சாலை, கடல் கொந்தளிப்பால் சேதமடைந்துள்ளதைப் பார்வை யிட்ட அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், "தனுஷ் கோடி-இலங்கை தலைமன் னாருக்கு இடையே கப்பல் போக்குவரத்திற்குத் துறைமுகம் அமைக்கவும் பாலம் அமைக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் இலங்கை தரப்பிலிருந்து பதில் இல்லை," என்று தெரி வித்தார்.