ஜெயலலிதா தெம்பாக உள்ளார்: ரெட்டி தகவல்

ஜெயலலிதா தெம்பாக உள்ளார்: ரெட்டி தகவல்

1 mins read
2867353b-e8b6-495f-8580-2ad46d75ef00
-

சென்னை: முதல்வர் ஜெயலலிதா மனதளவிலும் உடல் ரீதியாகவும் தெம்பாக, திடமாக உள்ளதாக அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித் துள்ளார். நேற்று சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், ஜெய லலிதாவுக்கு ஏற்பட்டு இருந்த நுரையீரல் தொற்று முழுமையாக குணமடைந்து விட்டதாகவும் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பே முதல்வர் ஜெயலலிதா நன்கு குணமடைந்துள்ளதாகவும் அவர் விரும்பும்போது வேறு வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் ரெட்டி குறிப்பிட்டிருந்தார். அதை தற்போதும் உறுதி செய் துள்ள அவர், கூடுதல் தகவல் களையும் கூறியுள்ளார். "ஜெயலலிதா நோய்த் தொற்றுக்காகவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந் தார். தீவிர சிகிச்சைகள் மூலம் முதல்வருக்கு இருந்த நோய்த் தொற்று இப்போது முற்றிலுமாகக் குணமாகி உள்ளது.

ஜெயலலிதா. படம்: ஊடகம்