ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட 5 மி. புதிய ₹500 நோட்டுகள்

ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட 5 மி. புதிய ₹500 நோட்டுகள்

1 mins read

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் இந்தியப் பிரதமர் மோடி அறிவித்துள்ள அதிரடி நடவடிக்கையால் பழைய ₹500, ₹1,000 நோட்டுகளை மாற்று வதற்காக மக்கள் படாதபாடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சகத்திலிருந்து 5 மில்லியன் புதிய ₹500 நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக செய்தி வெளியிடப்பட் டுள்ளது. மேலும், 5 மில்லியன் எண் ணிக்கையிலான புதிய 500 ரூபாய் நோட்டுகள் புதன் கிழமைக்குள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவ்வச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.