'எனது நடவடிக்கைகள் வலுவானதாக இருக்கும்'

'எனது நடவடிக்கைகள் வலுவானதாக இருக்கும்'

1 mins read
9e2cb4a3-425d-43b0-8e68-8725d1e270f3
-

காசிப்பூர்: கறுப்பு பணத்தை வெளிக் கொண்டு வரும் முயற்சியில் தனது நடவடிக்கைகள் வலுவானதாக இருக்கும் என்ற பிரதமர் மோடி அது தான் விற்ற தேநீர் போல் 'ஸ்ட்ராங்'காக இருக்கும் என்றும் கூறினார். உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரில் ரயில்வே இருப்புப் பாதை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். "ரூ.500, 1000 செல்லாது என்ற அரசின் அறிவிப்பால் ஏழைகள் நிம்மதியாக உறங்குகிறார்கள்; வரி ஏய்ப்பு செய்தவர்கள், கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் தூக்க மாத்திரைக்காக அலைந்து கொண்டிருக்கின்றனர். இது தான் வாக்குகளின் வலிமை.

"இதனால் நான் மிகப்பெரிய சவால்களைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் வலிமையானவர்கள். இருந் தாலும், ஏழைகளுக்காக நான் இந்த நடவடிக்கையை மேற் கொண்டுள்ளேன்.