புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வங்கியில் பணம் மாற்றித் தருவதாகக் கூறி 25 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கெள்ளையடித்துச் சென்ற நபரை போலிசார் தேடி வருகின் றனர். அறந்தாங்கியை அடுத்த துவரடிமனை கிராமத்தைச் சேர்ந்த சித்ரா என்பவர் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அப்பகுதியில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கி முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பணம் மாற்றித் தருவதாக அவரிடம் கூறி 25 ஆயி ரம் ரூபாய் பணத்தைப் பெற்றுச் சென்றுள்ளார். ஆனால், பல மணி நேரமாகியும் அவர் திரும்பி வராததால் போலிசாரிடம் சித்ரா புகார் அளித்தார். இதையடுத்து, 25 ஆயிரம் ரூபாய் ஏமாற்றிய நபரை போலிசார் தேடி வருகின்றனர்.
மாற்றப் போனவர் மாயமானார்; ரூ.25,000 இழந்து தவித்த பெண்
1 mins read

