செல்லாத நோட்டு அறிவிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

செல்லாத நோட்டு அறிவிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

1 mins read
33262d57-daee-4a00-9a19-262edb7fc62d
-

சென்னை: சென்னை மத்திய ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்களைக் காவல்துறை யினர் கைது செய்தனர். பழைய 500, 1,000 ரூபாய் நேட்டுகள் செல்லாது என்ற அறி விப்புக்கு எதிராக தமிழகம் முழு வதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை பாரி முனையில் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் பேராட்டம் நடைபெற்றது.

அப்பேது, ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற னர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்று அருகில் உள்ள மண்ட பத்தில் வைத்தனர்.

ஊழியர்கள் வேலைநிறுத்தம்; 4,500 வங்கிகள் மூடல் இதற்கிடையே, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாங்கக் கூடாது என அறிவித்ததால் தமிழ கம் முழுவதும் 4,500 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளை பணியாளர்கள் மூடி வேலைநிறுத் தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கியை முற்றுகையிட பாரிமுனை யில் ஒன்று திரண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். படம்: தமிழக ஊடகம்