பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்துவதே பிரதமரின் நோக்கம்: தமிழிசை

பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்துவதே பிரதமரின் நோக்கம்: தமிழிசை

1 mins read

மதுரை: பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்தவும், சாமானிய மக்களுக்கு எல்லாம் கிடைக்கும் நோக் கத்திலும் தான் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தமிழக பாஜக தலைவி தமிழிசை தெரிவித்துள்ளார். ஆனால் பிரதமரின் நடவடிக்கைகளை சில தரப்பினர் தேவையின்றி அரசியலாக்குவதாக மது ரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குற்றம்சாட்டினார். "மத்திய அரசின் கருப்புப்பண ஓழிப்பு நடவடிக்கையால் தற்காலிமாக ஏழைகள் சிரமப்படலாம், ஆனால் எதிர்காலம் ஓளிமயமாக அமையும். "கருப்புப் பணம் ஓழிப்பு வி‌ஷயத்தில் மத்திய அரசையும் பிரதமரையும் விமர்சிக்க ராகுல் காந்தி, சிதம்பரம், திருநாவுக்கரசு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின ருக்கு அருகதை இல்லை," என்றார் தமிழிசை.