கருப்புப் பணம்: எல்லையில் தீவிர கண்காணிப்பு

கருப்புப் பணம்: எல்லையில் தீவிர கண்காணிப்பு

1 mins read

நெல்லை: தமிழகத்திற்கு கருப்புப் பணம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தமிழக, கேரள எல்லைப் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம், புளியரையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற அதிரடி சோதனையின்போது கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ரூ. 11 லட்சம் சிக்கியது. இதையடுத்து எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.