தமிழக உயர்கல்வித்துறையில் பெரும் ஊழல்: ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழக உயர்கல்வித்துறையில் பெரும் ஊழல்: ராமதாஸ் குற்றச்சாட்டு

1 mins read

சென்னை: உயர்கல்வியை கற்பிப்பதற்கான ஆசிரியர்களை நியமிப்பதில் பெரிய அளவில் ஊழல் நடைபெறுவதாக வெளியாகும் செய்திகள் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தமிழகத்தில் பணம் கொடுப்பவர்களுக்குத் தான் வேலை என்றால், பேராசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நிச்சயம் திறமையானவர்களாக இருக்க முடியாது என கூறியுள்ளார்.

"உயர்கல்வித்துறையில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வரப்போவதாக முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி கூறி வரும் நிலையில், ஊழலில் தமிழகம் முதலிடத்தைப் பிடிப்பதற்கான அறிகுறிகள் தான் தெளிவாக தென்படுகின்றன. "திறமையுள்ளவர்கள் நிச்சயம் பணம் கொடுத்து வேலைக்கு வரமாட்டார்கள். திறமை குறைந்தவர்களை பணியில் அமர்த்தி னால் கல்வித்தரம் நிச்சயம் குறையும்," என்று ராமதாஸ் விமர்சித்துள்ளார். இந்தியாவை உயர்கல்விக்கான உலக மையமாக மாற்றப்போவதாக அறிவித்த ஜெயலலிதா, இத்தகைய வழிமுறைகளின் மூலம் தான் அதை சாதிக்கப் போகிறாரா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.