காரைக்கால்: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்தனர். நேற்று முன்தினம் இரவு கோடியக்கரை கடற்பகுதியில் இத்தாக்குதல் நடந்துள்ளது. காரைக்காலைச் சேர்ந்த 9 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். புதன்கிழமை இரவு அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரு மீனவர்களுக்கு கழுத்திலும் தொடையிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வேகமாக கரை திரும்பியதால் உயிர் பிழைத்ததாக மற்ற மீனவர்கள் பீதியுடன் தெரிவித்தனர். இதையடுத்து மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு
1 mins read

