திருச்சி: பாலத்தின் தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதிய சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். துறையூரில் உள்ள வேளாண்மை கல்லூரியில் படித்த அம்மூவரும் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது கல்லூரிக்கு அருகே உள்ள பாலத்தின் மீது வாகனம் மோதியதில், மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதனால் படுகாயமடைந்த மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதிய இருசக்கர வாகனம்: மூவர் பலி
1 mins read

